நிலவு முகம் காண்பதற்கு விழிகள் ஏங்குதே, அதனை
நினைந்து நினைந்து செந்தமிழில் சிந்து பாடுதே
(நிலவு)
அம்மா உந்தன் அழகு முகம், கண்டால் உள்ளம் அமைதி பெறும்
என்பால் உந்தன் விழியிரண்டைச் செலுத்திடுவாயோ, உந்தன்
கண்ணால் எந்தன் கவலைகளைக் கரைத்திடுவாயோ?
(நிலவு)
அகிலம் ஆளும் மகாராணி, ஆனால் எந்தன் அன்னையும் நீ
அன்னையென்று சொல்வதில்தான் இன்பம் இருக்குது, நானுன்
பிள்ளையென்று நினைக்கையிலே துன்பம் பறக்குது
(நிலவு)
--கவிநயா
அழகு உன்முகம் அது அகிலம் ஆளும் அகிலாண்டேஸ்வரி திருமுகம். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Delete