அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!
மனசே நீ ஓரிடத்தில் நில்லு, என்
அம்மாவின் பேரை மட்டும் சொல்லு
(மனசே)
நாளும் அவள் நினைவை நெஞ்சுக்குள்ளே போற்றி வை
கோல எழில் முகத்தைத் தீபமாய் ஏற்றி வை
(மனசே)
கலக்கம் தேவையில்லை, கவலைகள் தேவையில்லை
சரணென்று பணிந்து விட்டால், அவள் வருவாளே துணை
(மனசே)
தினமும் அழைத்திருந்தால். ஒரு நாள் அவள் வருவாள்
பழவினைகளை எல்லாம் ஒருநொடியில் களைவாள்
அன்னையென்று பெயரெடுத்த பேரரசி அவளல்லவோ?
பிள்ளையென்று பிரியமுடன் பேணுகின்ற சிவையல்லவோ?
(மனசே)
--கவிநயா
அருமையான மெட்டு வாழ்த்துக்கள் கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
ReplyDeleteவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
Delete