Tuesday, May 12, 2020

அரவணைக்கும் அன்னை


ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்

அன்னை அன்னை அன்னை என்று அன்னை உன்னை எண்ணியே
அன்னை அன்னை அன்னை என்று உன்றன் நாமம் சொல்லியே
அன்னை அன்னை அன்னை உன்னை எண்ணி என்றும் வாழவே
அன்னை அன்னை அன்னை நீயும் அருள் கொடுக்க வேணுமே
(ஓம்)

கோடிக் கோடிக் கோடிக் கோடிப் பிள்ளை பெற்ற அன்னையே
கோடிக் கோடிக் கோடிக் கோடிப் பிள்ளையுள்ளே கோடியாய்
நாடி நாடி உன்னை நாடி வாழுகின்ற போதிலே
கோடிப் பார்வையாலே நீயும் அருள் கொடுக்க வேணுமே

(ஓம்)

பூமி தன்னில் பிறக்கும் முன்னே செய்த வினைகள் எத்தனை
பிறப் பெடுத்த பின்னே இன்னும் செய்யும் வினைகள் எத்தனை
அறிந்து செய்த வினையுமறி யாமல் செய்த வினைகளும்
வெந்து தீய்ந்து தீர்ந்து போக அருள் கொடுக்க வேணுமே

(ஓம்)
கோடிக் கோடி அண்டம் ஆளும் ராணியான போதிலும்
ஐந் தெழுத்து நம சிவத்தின் பாதியான போதிலும்
ஐந் தொழில்கள் யாவும் செய்யும் தலைவி யான போதிலும்
அண்டி உன்னை வந்தவர்க்கு அரவணைக்கும் அன்னையே
(ஓம்)

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்



--கவிநயா


2 comments:

  1. வெகு நாளைக்குப்பின் வந்திருக்கிறேன் கவிநயா. தங்களின் பாடல்களுடன் கருட சேவை பதிவுகளை மின்னூலாக வெளியிட்டிருக்கிறேன். https://freetamilebooks.com/ebooks/karudasevai/ சென்று பாருங்கள். பக்கம் 155 & 161.

    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்! உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. என்ன அருமையான யோசனை... கருட சேவை மின்னூல் செய்து வெளியிட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அதில் இடம் பெறும் பாக்கியம் அளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

      Delete