அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்!
துர்க்கை துர்க்கை துர்க்கை என்று நாளும் பாடுவோம்
துர்க்கை
திருப் பாதங்களை நாளும் நாடுவோம்
துர்க்கை
யவள் இருக்கும் இடத்தில் துன்பங்கள் இல்லை
துர்க்கை
யவள் பேரைச் சொன்னால் ஓடிடும் தொல்லை
(துர்க்கை)
அசுரர்களை
அழித்துத் துவம்சம் செய்த சூலினி
ரக்தபீஜன்
உதிரந்தன்னைக் குடித்த காளிநீ
தீயவற்றைத்
தீய்க்கவென்றே தோற்றம் கொண்டவள்
நன்மை
செய்யும் நல்லவரைக் காக்க வந்தவள்
(துர்க்கை)
வீரம்
கொண்ட மாந்தருக்கு வெற்றி நல்குவாள்
சூலம்
கொண்டு பகைவருக்குப் பாடம் சொல்லுவாள்
காலங்
காலமாக அன்பு காட்டும் தாயவள்
காலனையும்
கணப் பொழுதில் ஓட்டுவா ளவள்
(துர்க்கை)
வேதனைகள்
தந்து அவள் வேடிக்கை செய்வாள்
சோதனைகள்
தந்து சுத்தத் தங்க மாக்குவாள்
அன்னை
யென்று அழைத்து விட்டால் அன்பு காட்டுவாள், சொந்தப்
பிள்ளையென்று
சேர்த்தணைத்துத் துயரம் ஓட்டுவாள்
(துர்க்கை)
--கவிநயா
https://m.facebook.com/groups/333099380649087?view=permalink&id=676423386316683&sfnsn=wiwspmo
ReplyDeleteஅந்த லிங்கில் அழகிய உங்கள் பாடல் 👌🙏🙏👌👌
ReplyDeleteஆஹா, ரொம்ப நல்லாருக்கு!! நாதான் எழுதினேன்னு மறந்தே போச்சு. உங்களோடத கேட்டுட்டு பிறகு தேடினேன். ரொம்ப ரொம்ப நன்றி! உங்களுக்கு அன்னையின் அருள் என்றென்றும் நிறையணும்னு வேண்டிக்கிறேன்!
ReplyDeletehttp://ammanpaattu.blogspot.com/2017/07/blog-post_24.html
நீங்கள் அந்த தாயின் மீது கொண்டுள்ள பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது...நிறைய எழுதுங்கள்... உங்கள் பாடல் நிறைய பாடி குருதபோவனத்தில் பதிவு செய்திருக்கின்றோம்..வாழ்த்துகள் சகோதரி....ஓம் சக்தி🙏🙏🙏🙏
Deleteஎங்களுக்கு கர்னாடக இசை தெரியாது...தவறாக பாடியிருந்தால் மன்னிக்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏
ReplyDeleteநீங்கள் பாடினதே பெரு மகிழ்ச்சி. இசை தெரியாவிட்டால் என்ன, பக்தி இருந்தால் போதும். ஏனென்றால் எனக்கும் சங்கீத ஞானம் இல்லை. அதனால் கூட்டு சேர்ந்து கொள்கிறேன் :)
ReplyDelete"நிறைய பாடி" என்று சொல்லியிருக்கிறீர்களே, பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.
அனுப்புகின்றேன் விரைவில்🙏🙏
Delete