சரஸ்வதி
சகல
கலை அரசி, சரஸ்வதி
சகல
உலகும் போற்றும், சரஸ்வதி
(சரஸ்வதி)
வேத
நாயகி நாத ரூபிணி
நான்முகன்
நாவினில் குடி கொண்ட தேவி நீ
(சரஸ்வதி)
வெண்மலரில்
இருப்பாள்; வீணை ஒலித்திருப்பாள்
கண்மலராம்
கல்வியும், ஞானம் அளித்திடுவாள்
பண்ணும்,
பரதமும், நற்கவியும் தருவாள்
எண்ணருங்
கலைமகள் இசைத்தமிழில் ஒளிர்வாள்
(சரஸ்வதி)
வாணியும்
நீயே வேணியும் நீயே வேதங்கள் போற்றும் பொருள் நீயே
கானமும்
நீயே மோனமும் நீயே ஞானம் நல்குகின்ற அருள் நீயே
வானகம்
நீயே வையகம் நீயே ஈரேழுலகும் உனதருளே
சூடணும்
உன் பதம், பாடணும் உனை நிதம், கவியினில் நிலைத்திடு கருப்பொருளே
(சரஸ்வதி)
--கவிநயா
https://www.facebook.com/groups/1741066776032221/permalink/1786141451524753/
ReplyDeletehttps://www.facebook.com/groups/1741066776032221/permalink/1784581428347422/
ReplyDeletehttps://www.facebook.com/groups/1741066776032221/permalink/1783304781808420/
ReplyDeletehttps://www.facebook.com/100015067080839/videos/992182741293953/
ReplyDeletehttps://www.facebook.com/100015067080839/videos/991278121384415/
ReplyDeleteபாடல்களை ஹெட்போனில் கேட்கவும்..🙏🙏
ReplyDeleteமிக்க நன்றி 🙏
ReplyDelete