திருமகளே வருக, உன்றன்
திருவருளைத்
தருக
(திரு)
அலைகடலில்
உதித்த அழகிய தேவி
அறிதுயில்
பயிலும் மாலவன் ராணி
(திரு)
வதனம்
தாமரை, விழிகள் தாமரை
ஆசனமும்
செந் தாமரையே
பதங்கள்
தாமரை கரங்களில் தாமரை
நீயே
ஒரு பெண் தாமரையே
(திரு)
ஏழை
மாந்தருக் கருளிடவே
எட்டு
விதமாக வடிவம் கொண்டாய்
அஷ்ட
ஐஸ்வர்யம் அள்ளித்தரும்
அதிபதியே
எழில் அருள் நிதியே
(திரு)
--கவிநயா
No comments:
Post a Comment