அஞ்சுக
மொழியாள்
அஞ்சலென்
றருள்வாள்
அத்தனுடன்
அவள் வீற்றிருப்பாள்
அபயக்
கரம் தந்து காத்திருப்பாள்
பக்தியுடன்
அவளைச்
சித்தத்தில்
வைத்தால்
நித்தமும்
அவள் நமக்குத் துணை யிருப்பாள்
சுத்த
உள்ளந்தனில் குடியிருப்பாள்
பங்கய
விழியாள்
பரிவுடன்
அருள்வாள்
பிள்ளையென
நம்மைக் காத்திடுவாள்
பவ
வினைகள் யாவும் களைந்திடுவாள்
செஞ்சடை
யோனின்
நெஞ்சம்
கவர்ந்தவள்
தஞ்சமென்
றவர்க்கு அருள் புரிவாள்
கஞ்ச
மலர்ப்பத நிழல் தருவாள்
--கவிநயா
No comments:
Post a Comment