தவறுகளை மன்னிப்பாய் தாயே, உனக்கு
தகுதியான
மகளாக்கு நீயே
(தவறு)
செய்த
பிழை யாவையும் நீ பொறுத்தருள வேணும், பிழை
செய்யாமல்
இனிமேலே காத்தருள வேணும்
(தவறு)
கள்ளமில்லா
உள்ளமதைத் தருவாய், அதில்
கசடுகளை
அறுத்தெறிந்து அருள்வாய்
வெள்ளை
உள்ளத் தாமரையில் அமர்வாய்
விடிவெள்ளியாக
என் வாழ்வில் ஒளிர்வாய்
(தவறு)
--கவிநயா
No comments:
Post a Comment