தஞ்சமென
வந்தேனே தாயே, என்
சஞ்சலங்கள்
தீர்ப்பாயே நீயே
தும்பிக்கை
கணபதியின் தாயே
நம்பிக்கை
தருவாயே நீயே
(தஞ்சம்)
உனை
நினையா துழலும் பிள்ளை
பாராயோ
தாயே
உன்
நினைவை என் மனதில்
தாராயோ
நீயே
(தஞ்சம்)
உலகச்
சுமை அழுத்திட நான் உன்னை மறக்கிறேன், அதில்
மேலும்
மேலும் அமிழ்ந்து நான் என்னை இழக்கிறேன்
திருப்பாதம்
ஒன்றைத்தான் நம்பி இருக்கிறேன், உன்
அருட்பார்வை
கிடைக்காதோ, காத்துக் கிடக்கிறேன்
(தஞ்சம்)
--கவிநயா
No comments:
Post a Comment