Monday, October 31, 2016

ஒரு பதில் கூறாயோ?சுபபந்துவராளி ராகத்தில் கீதாம்மா மனமுருகப் பாடியது. மிக்க நன்றி அம்மா!

எந்தன் உறவாய் உன்னை நினைத்தேன்

உள்ளம் முழுவதும் உன்னை நிறைத்தேன்

கண்மணித் தாயே என்னுயிர் நீயே

என்னிடம் வாராயோ?

வந்தெனக்கு ஒரு பதில் கூறாயோ?அன்னை என்றுதான் உன்னை அழைத்தேன்

அருகில் அமர்ந்து பேசத் தவித்தேன்

அன்னைத் தமிழால் பாட்டும் படித்தேன்

என்னிடம் வாராயோ?

வந்தெனக்கு ஒரு பதில் கூறாயோ?உந்தன் பெயர்தான் நெஞ்சில் பதித்தேன்

மந்திரமாய் அதை ஓதி ஜெபித்தேன்

சுந்தரத் தாயே என்னுயிர் நீயே

என்னிடம் வாராயோ?

வந்தெனக்கு ஒரு பதில் கூறாயோ?விண்ணில் நிலவாய் என்னுள் ஒளிர்வாய்

மண்ணில் மலராய் என்னுள் மலர்வாய்

சொல்லில் பொருளாய் என்னுள் இருப்பாய்

என்னிடம் வாராயோ?

வந்தெனக்கு ஒரு பதில் கூறாயோ?


--கவிநயா 


1 comment:

  1. Thanks for sharing, nice post! Post really provice useful information!

    Giaonhan247 chuyên dịch vụ mua hàng mỹ từ dịch vụ order hàng mỹ hay nhận mua nước hoa pháp từ website nổi tiếng hàng đầu nước Mỹ mua hàng ebay ship về VN uy tín, giá rẻ.

    ReplyDelete