Monday, October 8, 2018

கருணைக்கு அளவில்லை


அம்மா உன் கருணைக்கு அளவில்லையே, உன்
கருணைக்கு எழுகடலும் இணையில்லையே
(அம்மா)

உன் கருவிழியழகு கருத்துக்கு விருந்தாகும்
அவை பொழியும் கருணை மனதுக்கு மருந்தாகும்
(அம்மா)

எந்தன் மனக் கோயில் உள்ளே
உன்னை வைத்துப் பூசிக்கின்றேன்
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி
            நாளும் நானும் சுவாசிக்கின்றேன்
உன் புகழைச் செந்தமிழில்
            சேர்த்து வைத்து வாசிக்கின்றேன்
அன்பையன்றி வேறெதை நான்
            உன்னிடத்தில் யாசிக்கின்றேன்?
(அம்மா)


--கவிநயா

No comments:

Post a Comment