Tuesday, November 6, 2018

உன்னாலே...



உன்னாலே உன்னாலே உலகம் இயங்குது
தன்னாலே தன்னாலே உள்ளம் மயங்குது
(உன்னாலே)

இன்பம் ஒன்று வந்து விட்டால் உள்ளம் துள்ளுது
துன்பம் வந்து சேர்ந்து விட்டால் உடைந்து துவளுது
(உன்னாலே)

உன்னை நினைத்துப் பாடுகிறேன் கேட்கவில்லையோ?
உன்னை அழைத்துக் கூவுகிறேன் செவிகள் இல்லையோ?
உன்னை நினைத்து வாழும் பிள்ளை நினைவில் இல்லையோ?
என்னைக் கண்ணெடுத்துப் பார்த்திடவும் நேரமில்லையோ?
(உன்னாலே)



--கவிநயா

1 comment:

  1. சபாஷ் .. சபாஷ் துள்ளலுடன் அமைந்த அருமையான மெட்டு. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete