Monday, September 30, 2019

துர்கா துர்கா


அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!


துர்கா துர்கா என்று சொன்னால் துயரங்கள் தீரும்
தூய மனதில் அவள் வடிவம் தினந்தினம் தோன்றும்
(துர்கா)

துக்கங்களைத் தீர்க்கவென்றே தோற்றம் கொண்டவள், நம்
பக்கம் நின்று பாவங்களைப் போக்குகின்றவள்
(துர்கா)

சூலமேந்தி வருகையிலே காளியானவள், அந்த
நீலமேக வண்ணம் ஏற்று நீலியானவள்
பரசிவனின் தேகத்திலே பாதியானவள், தன்னைப்
பணியும் அன்பர் யாவருக்கும் தாயுமானவள்
(துர்கா)



--கவிநயா

2 comments:

  1. suits my mood at this age.
    https://soundcloud.com/meenasury/durgadurga
    Subbu thatha

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது தாத்தா, என் மனதில் தோன்றிய மெட்டோடு ஒத்துப் போகிற மாதிரியும் அமைத்திருக்கிறீர்கள். ரொம்ப நாளைக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் பார்த்ததிலும், உங்கள் குரலில் கேட்டதிலும் மிகவும் மகிழ்ச்சி தாத்தா.

    ReplyDelete