செந்தாமரை எழில் ராணி, உந்தன்
கண் தாமரையால் அருள் பொழிந்திட வா நீ
(செந்தாமரை)
பாற்கடலில் உதித்தாய், பரந்தாமனை வரித்தாய்
எண் வடிவம் எடுத்தாய், செல்வம்பல அள்ளிக் கொடுத்தாய்
(செந்தாமரை)
மாதவன் மார்பினிலே மலர்ந்திருக்கும் கமலை
மாதவர் யாவருக்கும் மகிழ்ந்தளிப்பாள் அருளை
திருவடிச் சேவையினில் இலயித்திருக்கும் கோதை
திருவடி பணிந்து விட்டால் காட்டிடுவாள் பாதை
(செந்தாமரை)
--கவிநயா
செந்தாமரையில் வீற்றிருக்கும் செம்தாள் மறை. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
ReplyDelete