துணை
நீயே என் தாயே, துயரங்கள் துரத்தி விட
இதயத்திலே
இருந்து, இன்னொளி காட்டி விட
(துணை)
பாதங்கள்
பற்றிக் கொண்டேன், பார்வையைத் திருப்பி விடு
வேதனை
தீர்த்து விடு, வினைகளை விரட்டி விடு
(துணை)
அடர்ந்த
காடெனினும், கதிரொளி புகுந்து விடும்
இருள்
சூழ் மனமெனினும், உனதருள் ஊடுருவும்
எனக்கிங்கு
வழி காட்டு, விழிவழி ஒளி காட்டு
உலகினில்
உனையன்றி எனெக்கென எவருண்டு?
(துணை)
--கவிநயா
No comments:
Post a Comment