அருள்
கிடைக்கும் நாள் எதுவோ, அம்பிகையே?
இருள்
நீங்கி ஒளி துலங்க, வா உமையே
(அருள்)
நெஞ்சம்
தடுமாறச் செய்யும் சஞ்சலங்கள் நீங்கிடவும்
வஞ்சமனம்
கொண்டிருக்கும் சம்ஸயங்கள் தீர்ந்திடவும்
(அருள்)
உன்றன்
பத மலர்களிலே அன்புமிகக் கொண்டிடவும்
உன்னடியை
முழு மனதாய் நம்பி நிதம் தொழுதிடவும்
உன்றன்
உள உகப்பேதான் என்னுகப்பாய் ஆகிடவும்
என்றும் உன்றன் கரம் பிடித்து உன்றன் வழி நடந்திடவும்
(அருள்)
--கவிநயா
No comments:
Post a Comment