Tuesday, September 16, 2014

தயங்குவதேன் தாயே?


தயங்குவதேன்  தாயே?

தூய்மை கெடுமென அஞ்சிச் சேற்றினில்
தாமரை பூத்திடத் தயங்கிடுதோ ?
அன்னையே!உன்பதத் தாமரை எந்தன்
சென்னியில் மலர்ந்திடத் தயங்குவதேன் ?

கறையுற்ற நிலவினில் குறைகாணாமல்
சிரந்தனில் சூடிய  ஜகத் ஜனனி!
அருகதையற்றவளாயினும் எந்தன்
சிரந்தனில் திருவடி பதித்தருள் நீ!

பாமர தாசனைப் பாவலனாக்கிய
சாமளையே! என் கோரிக்கை கேள்!
தரம்,தகுதி யேதும் தேடாமலெந்தன்
சிரந்தனில் பதித்தருள்வாய் பூந்தாள்!

ஓடேந்தித்திரியும் பிச்சாண்டிப்பித்தனை
நாடி மணங்கொண்ட நாரிமணி!
ஞானசூனியன் நாடிவந்தேனுனை ,
ஞானப்பிச்சை  ஈந்தருள்வாய் நீ !

[அம்மன் பாட்டு வலை  கவிநயாவின் செவ்வாய் பக்திப்பாடல்  இன்றி 'வெறிச்'சென்று இருக்கக்கண்டு தாங்காததால் ஏற்பட்ட விளைவு இந்தப் பாட்டு ]

3 comments:

  1. அழகன வரிகள்.
    நன்றி லலிதா அம்மா!

    கவினயவிற்கு என்னாச்சு ! என்னக்கும் மனசு தாங்கலை!

    ReplyDelete
  2. சிரந்தனில் பதம் பதிப்பாய் தாயே!

    நன்றி லலிதாம்மா!

    ReplyDelete
  3. இப்போதான் பதிவிட்டேன், நேரம் கிடைக்கையில் பாருங்கள் ஷைலன், லலிதாம்மா.

    ReplyDelete