இமயத்தில் இருப்பவளே
என்றன்
இதயத்தில் வருவாயே
சமயத்தில் காப்பவளே என்னிடம்
சடுதியில் வருவாயே
உலகத்தில் ஓர்துணையும்
இன்றி
உழலுகின் றேனம்மா
நிகளத்தின் பிடியினிலே
சிக்கிவ்
சுழலுகின் றேனம்மா
இருப்பது மெய்யானால்
அம்மா
இக்கணம் வருவாயே
மறுப்பெது மில்லாமல்
உன்றன்
தரிசனம் தருவாயே
--கவிநயா
No comments:
Post a Comment