"அம்மா என்றழைக்காத உயிரில்லையே" மெட்டில்...
அழைத்தால்தான்
வருவாயோ சொல்வாய் அம்மா, நான்
அழைக்காமலே
அருகில் வருவாய் அம்மா
உன்னையன்றி
... வேறு ஒன்றை
நாடாமல்
நானிருக்க அருள்வாய் அம்மா
(அழைத்தால்)
உலகத்திலே
பிறந்து உனை மறந்தே தான் திரிந்து
உழன்றே
நான் படும் பாடு அறிவாயம்மா
கலயத்திலே
இட்ட சோறாக நீ வந்து
தீராத
பசி தன்னைத் தீர்ப்பாயம்மா
அடித்தாலும்
அணைத்தாலும், அழுதாலும் சிரித்தாலும்
உனையன்றி
கதியொன்று கிடையாதம்மா
இன்பங்கள்
துன்பங்கள் என்றேதும் இங்கில்லை
பேரின்பம்
உன் பாதம் ஒன்றே அம்மா
அதை
நீயே ... தருவாயே
(அழைத்தால்)
--கவிநயா
No comments:
Post a Comment