கற்பனையில் காணுகின்றேன் உன்றன் முகத்தை, என்றன்
நற்பயனே
இதுவும் அம்மா, உன்றன் விருப்பே
(கற்பனையில்)
வட்ட
முகம் வந்து நிற்கும் என்றன் நெஞ்சிலே, அது
வட்ட
நிலா போல ஒளி வீசும் மனதிலே
காடு
போல இருண்டிருக்கும் உலக வாழ்விலே
கதிரைப்
போல வழி காட்டும் உன்றன் விழிகளே
(கற்பனையில்)
காதணியின்
அசைவு தென்றல் காற்று ஆனதோ
செவ்விதழின்
விரிவு செக்கர் வானம் ஆனதோ
அம்மா
உன் கருங்கூந்தல் மேகம் ஆனதோ
உன்னருளே
வானம் பொழியும் மழையும் ஆனதோ
(கற்பனையில்)
--கவிநயா
No comments:
Post a Comment